அயோத்தியில் ராமர் கோவில்: 1992-ம் ஆண்டு போல சட்டத்தை மீறுவோம் - பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை


அயோத்தியில் ராமர் கோவில்: 1992-ம் ஆண்டு போல சட்டத்தை மீறுவோம் - பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 23 Nov 2018 9:45 PM GMT (Updated: 2018-11-24T00:47:42+05:30)

அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில், 1992-ம் ஆண்டு போல சட்டத்தை மீறுவோம் என்று கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

பாலியா,

விசுவ இந்து பரிஷத் ஆதரவு பெற்ற தரம் சபா அமைப்பின் சார்பில் உத்தரபிரதேச மாநிலம் பாலியா நகரில் நடந்த ஒரு ஊர்வலத்தில் கலந்துகொண்டு பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் பேசினார்.

அப்போது அவர் ஆவேசமாக கூறுகையில், “அயோத்தியில் என்ன விலை கொடுத்தாவது ராமர் கோவிலை கட்டுவோம். இதற்காக எதையும் சந்திக்க தயார். ஏனென்றால் இது நம்பிக்கை சார்ந்த விஷயம். சட்டத்தையும், அரசியலமைப்பையும் விட மேலானது.

ஞாயிற்றுக்கிழமை(நாளை) 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் நான் அயோத்திக்கு செல்வேன். அங்கு சட்டத்தை மீறும் நிலை ஏற்படும் பட்சத்தில் 1992-ம் ஆண்டு அயோத்தியில் மக்கள் சட்டத்தை மீறியதை போல மீண்டும் மீறுவோம். அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்” என்றார். சுரேந்திர சிங் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story