குற்றவழக்கில் தண்டனை பெற்ற எம்.பி.க்களுக்கு ஆயுள்கால தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி


குற்றவழக்கில் தண்டனை பெற்ற எம்.பி.க்களுக்கு ஆயுள்கால தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 4 Dec 2018 2:00 AM IST (Updated: 4 Dec 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

குற்றவழக்கில் தண்டனை பெற்ற எம்.பி.க்களுக்கு ஆயுள்கால தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் ‘லோக் பிரஹரி’ என்ற தொண்டு அமைப்பு, குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ., எம்.பி. போன்றவர்கள் ஆயுள்காலம் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ஏற்கனவே பா.ஜனதா எம்.பி. உபாத்யாய் இதே கோரிக்கைக்காக தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது. எனவே இந்த மனுவை விசாரிக்க தேவையில்லை என்பதால் தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story