ஜம்மு காஷ்மீர்: இன்றைய 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.3 சதவீத வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.3 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 7-வது கட்ட தேர்தல் நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
341 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1798 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5575 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 2714 வாக்குச்சாவடிகள் (காஷ்மீர் 576, ஜம்மு 2138) அமைக்கப்பட்டிருந்தன. இதில் 892 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 912 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய 7-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் ஜம்மு பகுதியில் 84.8 சதவீதம் வாக்குகளும், காஷ்மீர் பகுதியில் 30.3 சதவீதம் வாக்குகளும் பதிவானது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக 75.3 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது.
முன்னதாக கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24-ம் தேதி நடந்த மூன்றாவதுகட்ட தேர்தலில் 75.2 சதவீதம் வாக்குகளும், நான்காம்கட்ட தேர்தலில் 73.1 சதவீதம் வாக்குகளும், ஐந்தாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், ஆறாம்கட்ட தேர்தலில் 76.9 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story