நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் மும்பை அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ; 6 பேர் பலி - 100 பேர் படுகாயம்


நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் மும்பை அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ; 6 பேர் பலி - 100 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Dec 2018 9:45 PM GMT (Updated: 2018-12-18T01:17:56+05:30)

மும்பை அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து. இதில் 6 பேர் பலியாயினர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

மும்பை காம்கார் அரசு மருத்துவமனையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 6 நோயாளிகள் பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர். நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

மும்பையில் பரபரப்பான அந்தேரி மரோல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளது. 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று மாலை 4 மணியளவில் மருத்துவமனையின் 4-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதன் காரணமாக அதிகளவில் கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. சிறிது நேரத்திலேயே மருத்துவமனை பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் என அனைவரும் பதறியபடி ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங் களில் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

என்றாலும் பலர் தீக்காயம் அடைந்து இருந்தனர். சிலர்புகையில் சிக்கி மூச்சு திணறி மயங்கிய நிலையில் இருந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு நடத்திய பரி சோதனையில் இவர்களில் 6 நோயாளிகள் பலியானது தெரியவந்தது.

100-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story