ஜிகா அலார்ட்: கர்ப்பிணிகள் ராஜஸ்தானுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை


ஜிகா அலார்ட்: கர்ப்பிணிகள் ராஜஸ்தானுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2018 12:03 PM GMT (Updated: 19 Dec 2018 12:24 PM GMT)

ஜிகா வைரஸ் அலார்ட் காரணமாக கர்ப்பிணிகள் ராஜஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க அமைப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மும்பை,

உலகம் முழுவதும் சுமார் 86 நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜிகா வைரஸ், ஏடிஸ்  என்ற கொசுவால் பரவக் கூடியது.  டெங்குவை போன்று காய்ச்சல், தோல் பாதிப்பு, தசை மற்றும் மூட்டுகளில் வலி, தலைவலி ஏற்படுதல் ஆகியவை ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும். முதன்முதலில் கடந்த 2017-ம் ஆண்டின்போது அகமதாபாத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.  ஜிகா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது.  ஜிகா வைரசுக்கு தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. கண்டிப்பாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளைப் பயன்படுத்தக்கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் தீர்வாக உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.  தலை சிறியதாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகமாக ஜிகா வைரஸ் தாக்குதல் பதிவாகியுள்ளது. இதனை தீவிரமாக கண்காணிப்பதாக கூறிய மத்திய அரசு, பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்றும் கூறியது. இந்நிலையில் ஜிகா வைரஸ் அலார்ட் காரணமாக கர்ப்பிணிகள் ராஜஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்  (சிடிசி) வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், இந்தியாவில் ஜிகா பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு கர்ப்பிணி பெண்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று இந்தியாவின் பொதுநலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்திற்கு கர்ப்பிணி பெண்கள் செல்ல வேண்டாம் என்று சிடிசி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பாலியல் உறவை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ள சிடிசி, ஜிகா பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு செல்லும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்களை விரட்டும் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள், ஆணுறை வைத்துக் கொள்ளுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.  

Next Story