மக்களின் வங்கி கணக்குக்கு ரூ.15 லட்சம் எப்போது வரும்? - மத்திய மந்திரி புது விளக்கம்


மக்களின் வங்கி கணக்குக்கு ரூ.15 லட்சம் எப்போது வரும்? - மத்திய மந்திரி புது விளக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2018 10:30 PM GMT (Updated: 19 Dec 2018 8:37 PM GMT)

மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் எப்போது வரும் என்ற கேள்விக்கு, மத்திய மந்திரி புது விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை,

ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், ஒவ்வொரு குடிமக்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததாகவும், இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலேயிடம் மராட்டிய மாநிலம் சாங்கிலியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

குடிமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது உண்மை. ஆனால் அதில் சில தொழில்நுட்ப பிரச்சினை உள்ளது. அரசிடம் இவ்வளவு அதிக பணம் இல்லை. பணம் வழங்குமாறு ரிசர்வ் வங்கியிடம் கோரப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் தரவில்லை. ரூ.15 லட்சம் உடனே கிடைத்து விடாது. மெதுவாக தான் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story