ராகுல் காந்தியை கோமாளி என்று அழைப்பதில் தவறில்லை பெண் எம்.பி. கேலி


ராகுல் காந்தியை கோமாளி என்று அழைப்பதில்  தவறில்லை பெண் எம்.பி. கேலி
x
தினத்தந்தி 20 Dec 2018 5:45 AM GMT (Updated: 20 Dec 2018 5:45 AM GMT)

ராகுல் காந்தியை கோமாளி என்று அழைப்பதில் தவறில்லை என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி எம்.பி. கே.கவிதா கூறி உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகரராவ்  தேர்தலின் போது நடந்த பிரசார கூட்டத்தில்  பேசும்போது  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கோமாளி என கேலி செய்து இருந்தார். இதனை அந்த கட்சியின்  எம்.பி. கே.கவிதா தற்போது நியாயப்படுத்தி உள்ளார்.

டெல்லியில் நிருபர்களிடம் பேட்டி அளித்த தெலுங்கானா  ராஷ்டீரிய சமிதி  எம்.பி. கே.கவிதா கூறியதாவது:-

பாராளுமன்ற நடைமுறைகளை  மீறி  ராகுல் காந்தி  பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார். இதனை தேசம் முழுவதும் பார்த்தது.  இது போன்ற முட்டாள்தனமான காரியங்களை செய்வதால் ஒரு நபரை கோமாளி என  குறிப்பிடுவதில் தவறு எதுவுமில்லை. ராகுல் காந்தி  அடுத்த பிரதமர் என்றதுமே  காங்கிரசை 2 அரசியல் கட்சிகள் கழற்றி விட்டுவிட்டன என்று கூறினார்.

மத்தியில் ஒரு  முன்னணியை உருவாக்குவதன் மூலம்  தேசிய அளவில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்ற நோக்கத்தை சந்திரசேகரராவ் கொண்டிருந்தார் . அது அல்லாமல் ஒரு கட்சி அதிகாரத்தை அதிகரிப்பதற்கோ  அல்லது ஒரு தலைவர் பிரதமராவதற்கோ அல்ல. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மிகவும் வெற்றிகரமானது என கூறினார்.

Next Story