தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணிபெண்: பிரசவம் பார்த்து குழந்தையை உயிருடன் மீட்ட பெண் காவலர்


தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணிபெண்: பிரசவம் பார்த்து குழந்தையை உயிருடன் மீட்ட பெண் காவலர்
x
தினத்தந்தி 21 Dec 2018 6:43 PM GMT (Updated: 2018-12-22T00:13:15+05:30)

மத்திய பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் போலீஸ் பிரசவம் பார்த்து குழந்தையை உயிருடன் மீட்டுள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் கட்னி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் தாகூர். இவரது மனைவி லட்சுமி தாகூர். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆகி பிரசவத்திற்கு இருந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட லட்சுமியை பெண் போலீசார் உதவியுடன் கிழே இறக்கிய போது அந்த பெண் நிறைமாத கர்பிணி என தெரியவந்தது.

வயிற்றில் இருந்த குழந்தை பாதி வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டரின் அறிவுத்தலின் படி குழந்தையை மெதுவாக வெளியே எடுத்தார் பெண் போலீஸ். பின்னர் டாக்டர் வந்து குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டினார். தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

Next Story