ஜம்மு காஷ்மீர்: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி, 34 பேர் காயம்


ஜம்மு காஷ்மீர்: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி, 34 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Dec 2018 5:30 AM GMT (Updated: 2018-12-24T11:00:44+05:30)

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வீரர் பலியானார்.

பனிஹால்,

ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்தோ -திபெத்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவு வீரர்களை ஏற்றிக்கொண்டு  பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, ரம்பன் மாவட்டத்தில் உள்ள குனி நல்லா என்ற பகுதி வழியாக சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், ஒரு வீரர் பலியானார்.  34 வீரர்கள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ராணுவத்தினர், உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ரம்பன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Next Story