இந்திய இராணுவப் பதுங்கு குழிகளை தாக்க, ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை பாகிஸ்தான் பயன்படுத்த திட்டம்


இந்திய இராணுவப் பதுங்கு குழிகளை தாக்க, ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை பாகிஸ்தான் பயன்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2018 6:07 AM GMT (Updated: 2018-12-24T11:47:59+05:30)

இந்திய ராணுவ நிலைகளை துல்லியமாக தாக்குவதற்காக, ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படைகளை இலக்காகக் கொண்டு  துல்லியமான தாக்குதல்களை நடத்த  ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை  பயன்படுத்த  பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகள் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிடமும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை கொண்டு எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்.

மேலும் நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கை கூட இந்த வகை பீரங்கிகள் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. மேலும் பீரங்கியை இயக்கி குண்டு வெளியேறிய பிறகும் கூட இலக்கை மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. இவற்றை வாங்குவதற்கு தற்போது பாகிஸ்தானும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள தங்கள் நாட்டுத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய ரக பீரங்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் குறித்து ஆராயுமாறு பாகிஸ்தான் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த காலத்தில், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை  தாக்குவதற்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்ப  பீரங்கிகளை பயன்படுத்தியது. இதனால் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story