மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு; மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தை தொடரும் - சந்திரசேகர ராவ்


மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு; மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தை தொடரும் - சந்திரசேகர ராவ்
x
தினத்தந்தி 24 Dec 2018 1:27 PM GMT (Updated: 2018-12-24T18:57:33+05:30)

மம்தா பானர்ஜியை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ், மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறியுள்ளார்.


கொல்கத்தா,


நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன.  காங்கிரஸ் மற்றும் பிற பிராந்திய கட்சிகள் இதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதற்கிடையே  5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்க தீவிரம் காட்டுகிறது. பா.ஜனதாவிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இதற்கிடையே தெலுங்கானா தேர்தலில் வெற்றிப்பெற்ற சந்திரசேகர ராவ், மூன்றாவது அணி என்ற கோஷத்தை முன்வைத்துள்ளார். காங்கிரஸ், பா.ஜனதா இல்லாத மூன்றாவது அணி என்று கூறுகிறார். ஆனால் இது பா.ஜனதாவிற்கே வலுசேர்க்கும் என்று விமர்சனம் செய்யப்படுகிறது. தெலுங்கானா தேர்தலில் அமோக வெற்றியை பெற்ற சந்திரசேகர ராவ் மூன்றாவது அணிக்கான பணியை தொடங்கிவிட்டார். முதலாவதாக ஒடிசா முதல்வர் நவின் பாட்நாயக்கை சந்தித்து பேசினார். 

இன்று மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மிகவும் வலுவான திட்டத்துடன் வருவோம். பா.ஜனதா, காங்கிரஸ் இல்லாத கூட்டணிக்கு என்னுடைய முழு நடவடிக்கையும் இருக்கும் என கூறியுள்ளார். 


Next Story