டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானங்கள் தாமதம்


டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானங்கள் தாமதம்
x
தினத்தந்தி 25 Dec 2018 3:55 AM GMT (Updated: 2018-12-25T09:25:53+05:30)

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில்  கடும் பனி மூட்டம் நிலவியது. கடுமையான பனிமூட்டம் காரணமாக குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக விமானப்போக்குவரத்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டெல்லியில் பாதிக்கப்பட்டுள்ளது. 

பனிமூட்டத்தால் ஓடுபாதை சரிவரத தெரியாததால், விமான புறப்பாடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  விமான புறப்பாடு தாமதமானதால்,  சில  பயணிகள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கிறிஸ்துமஸ் பயண திட்டம் பாதிப்படைந்துவிடும் என  பதிவிட்டதை காண முடிந்தது. 

Next Story