காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு, ஸ்ரீநகர் தால் ஏரி உறைந்தது


காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு, ஸ்ரீநகர் தால் ஏரி உறைந்தது
x
தினத்தந்தி 26 Dec 2018 2:47 AM GMT (Updated: 2018-12-26T10:23:54+05:30)

காஷ்மீரில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுகிறது.

ஜம்மு, 

காஷ்மீரில் இந்த பனிக்காலத்தில் நேற்று தான் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இந்த பனிப்பொழிவால் காஷ்மீர் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று காஷ்மீரில் மைனஸ் 4.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. அது கடந்த 17-ந் தேதி மைனஸ் 4.4 டிகிரி செல்சியசாக இருந்தது. காஷ்மீரில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு வெப்ப நிலை மைனஸ் 5.3 டிகிரி செல்சியசாக இருந்தது. அது முந்தையநாள் இரவு மைனஸ் 6.7 டிகிரி செல்சியசாக இருந்தது. இது காஷ்மீர் மாநிலம் முழுவதும் இருந்தது.

பனிகாரணமாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் லடாக்-முகால் சாலை நேற்று மூடப்பட்டது. அங்கு ஒருவழிப்பாதையில் போக்குவரத்து நடந்தது. இதேபோல், ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரி உறைந்தது. 

Next Story