மோடி, யோகியை ஆபாசமாக பேசியதாக ஊனமுற்ற வாலிபரை தாக்கிய பாஜக தலைவர்


மோடி, யோகியை ஆபாசமாக பேசியதாக ஊனமுற்ற வாலிபரை தாக்கிய பாஜக தலைவர்
x
தினத்தந்தி 26 Dec 2018 10:34 AM IST (Updated: 26 Dec 2018 10:34 AM IST)
t-max-icont-min-icon

மோடி, யோகியை ஆபாசமாக பேசியதாக ஊனமுற்ற வாலிபர் ஒருவரை பாரதீய ஜனதா கட்சி தலைவர் தாக்கி உள்ளார்.

லக்னோ

முன்னாள் முதலமைச்சரை ஆதரித்ததற்காகவும், யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த  ஊனமுற்ற வாலிபரை  பாரதீய ஜனதா கட்சிதலைவர் தாக்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம் சம்பால் மாவட்டம் சந்துசி தெஹில் பகுதியில் உள்ள குர்ஜா கேட் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குஜார் ஊனமுற்றவர் ஆவார்.

இவரை பாரதீயஜனதா  கட்சி தலைவர் முகமது மியான் என்பவர்  தாக்கி உள்ளார். நீ அகிலேஷ் யாதவுக்கு வாக்களித்தவன் என கூறி தடியால் தாக்கி உள்ளார்.

குஜார் மோடியையும்,யோகியையும் விமர்சித்ததால் மியான் தனது வாகனத்திலிருந்து ஒரு குச்சியை எடுத்து இளைஞரைத் தாக்கி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்த  வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அஸ்மோலி காவல் நிலையம் மியானுக்கு ஒரு பிரபலமான வரலாற்று புகலிடமாக உள்ளது. மேலும் குற்றவியல் முன்னோடியாக உள்ளார் என  சாம்பல்  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கூறி உள்ளார். இந்த சம்பவத்தில் குஜார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

குஜார் மூத்த பிஜேபி தலைவர்களுக்கு எதிராக ஆபாசமாக பேசினார். இதை கேட்டபிறகு எனது கட்டுப்பாடை இழந்து அவரை தாக்கி விட்டேன் இதற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன் என மியான் கூறி உள்ளார்.
1 More update

Next Story