வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: வங்கிப்பணிகள் பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: வங்கிப்பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2018 8:07 AM GMT (Updated: 2018-12-26T13:37:23+05:30)

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இன்று வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன. இதன்படி, இன்று இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருந்த போதிலும், தனியார் வங்கிகள் இன்று வழக்கம் போல் இயங்கின. ஒரேவாரத்தில், இரண்டாவது முறையாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 21-ஆம் தேதி ஊதிய பிரச்சினை மற்றும்  வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story