அய்யப்பன் கோவில் பாரம்பரியத்தை காக்க 10 லட்சம் பேர் 795 கி.மீ. தூரத்துக்கு விளக்கு ஏற்றினர்

சபரிமலை அய்யப்பன் கோவில் பாரம்பரியத்தை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில், ‘அய்யப்ப ஜோதி’ என்ற வித்தியாசமான போராட்டம், வலதுசாரி இயக்கங்களின் கூட்டமைப்பான சபரிமலை கர்ம சமிதி சார்பில் நேற்று கேரளாவில் நடைபெற்றது.
திருவனந்தபுரம்,
கேரளாவின் வடக்கில் உள்ள ஹொசங்காடி மாவட்டத்தில் இருந்து தெற்கில் உள்ள பாறசாலா மாவட்டம் வரை 795 கி.மீ. தூரத்துக்கு லட்சக்கணக்கானோர் அகல் விளக்கு ஏற்றினர்.
மாலை 4.30 மணியில் இருந்து சாலை ஓரத்தில் அணிவகுத்து நின்ற அவர்கள், மாலை 6 மணிக்கு விளக்கேற்றினர். ஏராளமான பெண்கள் உள்பட சுமார் 10 லட்சம் பேர் இதில் பங்கேற்றனர்.
கேரள தலைமை செயலகம் முன்பு, மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜகோபால், நடிகைகள் மேனகா, ஜலஜா உள்ளிட்டோர் விளக்கு ஏற்றினர். கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளையில் நடிகர் சுரேஷ் கோபி எம்.பி., பக்தர்களிடம் விளக்கை கொடுத்தார். பந்தளம் அரண்மனை பிரதிநிதியும் விளக்கு ஏற்றினார். ‘சரணம் அய்யப்பா’ கோஷத்துடன் நிகழ்ச்சியை முடித்தனர்.
Related Tags :
Next Story