இந்தியாவின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தி விட்டோம் - பாகிஸ்தான்; இந்திய ராணுவம் மறுப்பு


இந்தியாவின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தி விட்டோம் - பாகிஸ்தான்; இந்திய ராணுவம் மறுப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 2:21 PM IST (Updated: 2 Jan 2019 2:56 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் உளவு ட்ரோனை எல்லையில் சுட்டு வீழ்த்தி விட்டோம் என பாகிஸ்தான் கூறியதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பஹாக் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவின் உளவுத்துறை ட்ரோனை சுட்டு வீழ்த்தி விட்டோம் என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்திய ட்ரோன் என்று புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. ட்ரோனை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானின் கூற்றை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. எல்லையில் அதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மட்டும் எல்லையில் இந்தியாவின் 4 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது.

Next Story