மக்களவையில் இருந்து 26 அதிமுக எம்.பிக்கள் 5 அமர்வுகளுக்கு இடை நீக்கம்
அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக மக்களவையில் இருந்து 26 அதிமுக எம்.பிக்கள் 5 அமர்வுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
மக்களவையில் இருந்து அதிமுக எம்.பிக்கள் 26 பேர் 5 அமர்வுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயர் உத்தரவை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதாக அதிமுகவைச்சேர்ந்த 26 எம்.பிக்கள் 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 374ஏ விதிப்படி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story