தேச துரோக வழக்கு; கன்னையா குமார் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்


தேச துரோக வழக்கு; கன்னையா குமார் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 14 Jan 2019 3:54 PM IST (Updated: 14 Jan 2019 3:54 PM IST)
t-max-icont-min-icon

ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.

புதுடெல்லி,

ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தவர் கன்னையா குமார்.  நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் போடப்பட்ட நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 9ந்தேதி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய கன்னையா தேசத்திற்கு எதிரான வாசகங்களை எழுப்பினார் என குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தொடர்ந்து  இவர் மீது தேச துரோக வழக்கு ஒன்று பதிவானது.  இந்த வழக்கை விசாரணை மேற்கொண்டு வந்த டெல்லி போலீசார் இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோன்று முன்னாள் மாணவர்களான உமர் காலித் மற்றும் அனீர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் மீதும் டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
1 More update

Next Story