குஜராத்தில் காற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி


குஜராத்தில் காற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jan 2019 4:43 AM IST (Updated: 15 Jan 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் மாநிலத்தில் காற்றாடி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி ஏராளமானோர் கட்டிடங்களின் மேலே நின்று காற்றாடிகளை பறக்க விட்டனர்.

ஆமதாபாத், 

மேசானா பகுதியில் சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்ததில் அவன் உயிரிழந்தான்.

இதேபோல் மாஞ்சா நூல் அறுத்து மேலும் 4 பேர் பலியாகினர். ஆமதாபாத், சூரத், ராஜ்கோட் உள்பட பல இடங்களில் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.

1 More update

Related Tags :
Next Story