ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்


ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்
x
தினத்தந்தி 16 Jan 2019 7:46 AM GMT (Updated: 2019-01-16T13:39:57+05:30)

ஆபரேஷன் தியேட்டருக்குள் பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜய்ன் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்  சீனியர் மருத்துவர் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மதிய உணவு இடைவேளையின்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி மோசமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. ஒரு மருத்துவமனையின் சீனியர் மருத்துவர் இப்படி நடந்துகொண்டது மோசமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதையடுத்து, விசாரணை நடைபெற்றது. பின்னர் உடனடியாக டாக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.


Next Story