எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து கடிதம்


எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து கடிதம்
x
தினத்தந்தி 18 Jan 2019 8:17 AM GMT (Updated: 18 Jan 2019 8:17 AM GMT)

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

கொல்கத்தா,

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. அதனடிப்படையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நாளை மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட்  மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கலந்துக் கொள்கின்றனர்.

முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ், பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா ஆகியோரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்திற்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளார். மம்தா பானர்ஜிக்கு இது தொடர்பாக ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Next Story