2020 மார்ச் மாதத்துக்குள் கங்கை தூய்மையாகும் நிதின் கட்காரி நம்பிக்கை


2020 மார்ச் மாதத்துக்குள் கங்கை தூய்மையாகும் நிதின் கட்காரி நம்பிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2019 12:51 AM GMT (Updated: 2019-01-20T06:21:28+05:30)

2020 மார்ச் மாதத்துக்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்தார்.

நாக்பூர், 

மராட்டிய மாநிலம் நாக்பூரில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:–

கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக ரூ.26 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை கங்கையை சுத்தம் செய்யும் பணி 10 சதவீதம் மட்டுமே நடந்து உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 30 முதல் 40 சதவீதம் சுத்தம் செய்யும் பணி நிறைவடையும்.

2020 மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மை ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. கங்கை மட்டுமன்றி அதன் கிளை நதிகளையும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story