காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி


காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி
x
தினத்தந்தி 20 Jan 2019 11:56 AM GMT (Updated: 2019-01-20T17:26:03+05:30)

காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

ஜம்மு,  

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கோடு அருகே உள்ள ஹிராநகர் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் இந்திய ராணுவ தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை என ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். 

கடந்த 2 வாரமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.  பூஞ்ச், ரஜோரி செக்டர் பகுதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story