மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா 27 தொகுதிகளில் வெற்றிப்பெறும் - சிவராஜ் சிங் சவுகான்


மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா 27 தொகுதிகளில் வெற்றிப்பெறும் - சிவராஜ் சிங் சவுகான்
x
தினத்தந்தி 20 Jan 2019 1:09 PM GMT (Updated: 2019-01-20T18:39:01+05:30)

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா 27 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.


புதுடெல்லி,


 2018 இறுதியில் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் பா.ஜனதா தோல்வியை தழுவியது. பா.ஜனதா கோட்டையான மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா தோல்வியை தழுவியது. இதனையடுத்து முதல்வர் பதவியை இழந்த சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகானை மக்கள் பாசமாக மாமா என்று அழைத்து வருகிறார்கள். அவர் பேசுகையில், மாமா பலவீனமாகிவிட்டார் என்று என்ன வேண்டாம் என கூறியுள்ளார். 

டெல்லி பா.ஜனதா இளைஞரணி நிகழ்ச்சியில் பேசுகையில் , மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளது. எப்போதும் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி கவிழலாம். நான் பலவீனமாகிவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். 2014-ம் ஆண்டை போன்று வரும் 2019 தேர்தலிலும் மாநிலத்தில் உள்ள மொத்தம் 29 தொகுதிகளில் 27 தொகுதிகளில் வெற்றிப்பெறுவோம் என்று உறுதியளிக்கிறேன் என கூறியுள்ளார். 

எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மாப்பிள்ளை இல்லாத திருமணம் என விமர்சனம் செய்துள்ளார். நம்மிடமோ தலைவர் மோடி உள்ளார், அவர் தேர்தலில் நம்மை வழிநடத்துவார் எனவும் குறிப்பிட்டார் சிவராஜ் சிங் சவுகான்.

Next Story