சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்


சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்
x
தினத்தந்தி 21 Jan 2019 10:24 AM GMT (Updated: 2019-01-21T15:54:28+05:30)

சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

லிங்காயத் தலைவரும், கர்நாடக மாநில சித்தகங்கா மடாதிபதியுமான சிவகுமார சுவாமி இன்று (21-ம் தேதி) காலமானார். அவருக்கு வயது 111. 
இவரது மறைவுக்கு மாநில அரசு 3 நாள் துக்கம் அனுஷ்டித்துள்ளது. நாளை மாலை 4.30 மணி அளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.  சிவக்குமாரசாமியின் மறைவுக்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, சித்தராமையா  ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிவக்குமாரசாமியின் மறைவுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சித்தகங்கா மடத்திற்கு சென்று மடாதிபதி சிவகுமார சுவாமிகளை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். சித்தகங்கா மடத்தில் ஏராளமான சமூக பணிகளை செயல்படுத்தி வந்தவர் சிவக்குமாரசாமி என புகழாரம் சூட்டினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைந்தார் என செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் சமுதாயத்திற்காக பல சமூக பணிகளை மேற்கொண்டுள்ளார், கல்விக்காகவும் பெரும் பங்காற்றினார். அவரை இழந்து வாடும் அன்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story