சபரிமலை கோவிலுக்கு சென்ற கனகதுர்கா நிவாரண மையத்தில் தங்கவைப்பு


சபரிமலை கோவிலுக்கு சென்ற கனகதுர்கா நிவாரண மையத்தில் தங்கவைப்பு
x
தினத்தந்தி 22 Jan 2019 9:30 PM GMT (Updated: 2019-01-23T02:03:38+05:30)

சபரிமலை கோவிலுக்கு சென்ற கனகதுர்கா, நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

பெரிந்தலமன்னா,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கனகதுர்கா, பிந்து என்ற 50 வயதுக்கு குறைவான 2 பெண்கள் சென்றது அங்கு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அங்காடிபுரத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்ற கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதில் காயம் அடைந்தார். இதனால் கனகதுர்கா கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கனகதுர்காவுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கனகதுர்காவின் சகோதரரும், சபரிமலை கோவிலுக்கு சென்றதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்கும் வரை கனகதுர்காவை வீட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். இதனால் போலீசார் கனகதுர்காவை அவரது மாமியார் வீட்டில் இருந்து மீட்டு பெரிந்தலமன்னாவில் உள்ள நிவாரண மையத்தில் தங்கவைத்தனர்.


Next Story