டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்


டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:15 PM GMT (Updated: 22 Jan 2019 8:56 PM GMT)

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி,

இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் இந்தியாவின் சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்துகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு முதன்முறையாக 25-ந் தேதி வருகை தருகிறார். அவருடன் அவரது மனைவி ஷெபோ மோத்செபெ, 9 மந்திரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள், 50 வர்த்தக பிரமுகர்கள் ஆகியோரும் இந்தியா வருகிறார்கள்.

26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவர்கள் விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். அவரது வருகை இந்தியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவையும் ஏற்படுத்தும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நெல்சன் மண்டேலாவுக்கு பின்னர் இந்திய குடியரசு தினவிழாவில் விருந்தினராக பங்கேற்கும் 2-வது தென் ஆப்பிரிக்க அதிபர் ரமபோசா என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story