உத்தரபிரதேசத்தை உன்னதமான மாநிலமாக உருவாக்க இளைஞர்களை சேர்ப்போம் -ராகுல்காந்தி டுவிட்


உத்தரபிரதேசத்தை உன்னதமான மாநிலமாக உருவாக்க இளைஞர்களை சேர்ப்போம் -ராகுல்காந்தி டுவிட்
x
தினத்தந்தி 23 Jan 2019 1:12 PM GMT (Updated: 23 Jan 2019 1:12 PM GMT)

உத்தரபிரதேசத்தை உன்னதமான மாநிலமாக உருவாக்க இளைஞர்களை சேர்ப்போம் என்று ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. 
காங்கிரஸ் தேர்தல்களில் தோல்வியை தழுவும்போதெல்லாம் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய சுவரொட்டிகள் உத்தரபிரதேசத்தில் அடிக்கடி ஒட்டப்பட்டு வரும். தலைவர்களும் பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை மறைமுகமாக முன்வைத்தனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்து ராகுல் காந்தி அறிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் பிரியங்காவுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முதல் முறையாக பதவி கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரியங்கா காந்தி தலைமையிலான அணி உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு புதிய வகையான அரசியலை தொடும். உத்தரபிரதேசத்தை உன்னதமான மாநிலமாக உருவாக்க இளைஞர்களை சேர்ப்போம் என ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Story