ஐதராபாத்தில் பயங்கரம்: 2 வயது குழந்தை பக்கத்து வீட்டுக்காரனால் பலாத்காரம்


ஐதராபாத்தில் பயங்கரம்: 2 வயது குழந்தை பக்கத்து வீட்டுக்காரனால் பலாத்காரம்
x
தினத்தந்தி 25 Jan 2019 8:30 AM GMT (Updated: 2019-01-25T14:00:06+05:30)

ஐதராபாத்தில் 2 வயது குழந்தை கடத்தப்பட்டு பக்கத்து வீட்டுக்காரனால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

ஐதராபாத்,

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை வழக்குகளில் தண்டனை கடுமையாக்கப்பட்ட நிலையிலும் இதுபோன்ற கொடூரங்கள் அரங்கேறிதான் வருகிறது. இப்போது ஐதராபாத்தில் கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஐதராபாத் புறநகர் பகுதியான துண்டிகாலில் இரண்டு வயது குழந்தை பக்கத்து வீட்டுக்காரனான மொய்னுதீன் (33 வயது) என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 

குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பதாக கூறி கடத்திச்சென்று பலாத்காரம் செய்துள்ளான்.  குழந்தையை காணவில்லை என்று தேடிய போது அங்கிருந்த புதரில் குழந்தை அழுது கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது மொய்னுதீன் குழந்தையை தூக்கிச்செல்வது தெரிய வந்துள்ளது. குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளியை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story