சி.பி.ஐ. அமைப்புக்கு நிரந்தர இயக்குனரை நியமிக்காதது ஏன்? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

சி.பி.ஐ. அமைப்புக்கு நிரந்தர இயக்குனரை நியமிக்காதது ஏன் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கிய மத்திய அரசு, ஐ.பி.எஸ். அதிகாரி நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்தது. இந்த நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.
வழக்கின் விசாரணை தொடங்கியதும், ‘சி.பி.ஐ. இயக்குனர் பதவி மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில், அதற்கு இன்னும் இயக்குனரை நியமிக்காதது ஏன்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே பதவியில் இருந்த சி.பி.ஐ. இயக்குனரின் பதவிக்காலம் ஜனவரி இறுதியுடன் முடிவடையும் என்பது அரசுக்கு தெரிந்திருந்த நிலையில், இதற்கு முன்னரே புதிய இயக்குனரை தேர்வு செய்திருக்க வேண்டும் எனக்கூறி தங்கள் அதிருப்தியையும் நீதிபதிகள் வெளியிட்டனர்.

Related Tags :
Next Story