‘பட்ஜெட்டை பார்த்து காங்கிரசாருக்கு காய்ச்சல் வந்துவிட்டது’ - பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல்
பட்ஜெட்டை பார்த்து காங்கிரசாருக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காய்ச்சல் வருவது போல், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை பார்த்து காங்கிரஸ்காரர்களுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று கிண்டலாக கூறினார்.
இது தேர்தலுக்கான பட்ஜெட் அல்ல என்றும், ஆனால் எதிர்க்கட்சியினர்தான் அப்படி நினைப்பதாகவும், அவர்கள் தோல்வி பயத்தில் இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.
வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்ததாகவும், அரசு அதை செய்து இருப்பதாகவும் பேட்டியின் போது பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story