ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 4 Feb 2019 2:03 AM IST (Updated: 4 Feb 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஆமதாபாத்,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான அலுவலகத்துக்கு நேற்று காலை தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர் ‘குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ எனக்கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி ஆமதாபாத் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர் குழு, மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் விமான நிலையம் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். எனினும் வெடிகுண்டோ, மர்மபொருளோ எதுவும் சிக்கவில்லை. எனவே இது வெறும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story