தமிழகத்தில் பாரதீய ஜனதாவை வீழ்த்த தி.மு.க.வால்தான் முடியும்: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேச்சு


தமிழகத்தில் பாரதீய ஜனதாவை வீழ்த்த தி.மு.க.வால்தான் முடியும்: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேச்சு
x
தினத்தந்தி 4 Feb 2019 2:30 AM IST (Updated: 4 Feb 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பாரதீய ஜனதாவை வீழ்த்த தி.மு.க.வால்தான் முடியும் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் பகுதியில் நேற்று அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைத்து பேசிய முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதாவை வீழ்த்த தி.மு.க.வால்தான் முடியும் என்றார். இதேபோல் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியாலும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசாலும்தான் பாரதீய ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்று அவர் கூறினார்.

டெல்லியில் பாரதீய ஜனதாவை வீழ்த்தும் சக்தி ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே உள்ளது என்று கூறிய அவர், டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளையும் காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.

Next Story