பிரதமர் மோடியுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி சந்திப்பு


பிரதமர் மோடியுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி சந்திப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 5:50 PM IST (Updated: 5 Feb 2019 5:50 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் இன்று சந்தித்து உள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த வருடம் டிசம்பரில் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவியேற்று கொண்டார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கெலாட் இன்று சந்தித்து உள்ளார்.  இதனை பிரதமர் அலுவலகமும் டுவிட்டர் வழியே உறுதி செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரி கமல்நாத் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முதல் அமைச்சரும் பிரதமரை இன்று சந்தித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரசை சேர்ந்த இரு முதல் மந்திரிகள் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்து உள்ளனர்.

Next Story