பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் - ராஜ்நாத் சிங்


பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 14 Feb 2019 4:12 PM GMT (Updated: 2019-02-14T21:42:07+05:30)

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த வீரர்கள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமா பகுதிக்கு என்ஐஏ குழு நாளை செல்கிறது. ஐ.ஜி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் 12 பேர் கொண்ட தேசிய விசாரணை முகாமை விசாரிக்க உள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் எனக்கூறியுள்ளார்.

Next Story