சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது - அமித்ஷா


சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது - அமித்ஷா
x
தினத்தந்தி 17 Feb 2019 11:26 AM GMT (Updated: 2019-02-17T16:56:46+05:30)

சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்தியாகம் வீண் போகாது என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

லகிம்பூர்,

அசாம் மாநிலம் லகிம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசுகையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்த கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது, ஏனென்றால் மத்தியில் காங்கிரஸ் அரசு இல்லை. இது பா.ஜனதா அரசு. எந்தஒரு பாதுகாப்பு பிரச்சனையிலும் மோடி அரசு சமரசம் செய்துக்கொள்ளாது என்றார். 
 
அசாமை மற்றொரு காஷ்மீராக மாற விடமாட்டோம் என்ற அமித்ஷா, தேசிய குடியுரிமை பதிவேட்டை (என்ஆர்சி)  நாங்கள் கொண்டுவந்துள்ளோம். என்ஆர்சியின் உதவியுடன் நாங்கள் இந்தியாவிற்கு ஊடுருவிய அனைவரையும் வெளியேற்றுவோம். அதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என கூறியுள்ளார். 

Next Story