தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 18 Feb 2019 8:42 AM GMT (Updated: 2019-02-18T14:12:20+05:30)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐகோர்ட்  மதுரை கிளை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்  13 பேர் உயிர் இழந்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. நியாயமாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த அறிவுறுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தலாம், விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும் என கூறி உள்ளது.

Next Story