டெல்லியில் இருந்து பாகிஸ்தான் தூதர் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்


டெல்லியில் இருந்து பாகிஸ்தான் தூதர் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்
x
தினத்தந்தி 18 Feb 2019 9:15 PM GMT (Updated: 2019-02-19T01:09:17+05:30)

டெல்லியில் இருந்து பாகிஸ்தான் தூதர் தனது சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் நடத்தியதால் இருநாடுகளுக்கு இடையே ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மறுநாள் இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அஜய் பைசாரியாவை அழைத்து ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் முகமதுவை அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஆலோசனைக்கு வருமாறு அழைத்தது. அதன்படி சோகைல் முகமது நேற்று காலை டெல்லியில் இருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றார்.

Next Story