பாஜக எம்.எல்.ஏ கார் மோதி 2 பேர் பலி


பாஜக எம்.எல்.ஏ கார் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 19 Feb 2019 7:19 AM GMT (Updated: 2019-02-19T15:01:54+05:30)

கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூர்

கர்நாடகாவை சேர்ந்த ரவி என்ற பாஜக எம்.எல்.ஏ  நேற்று சிக்மகளூரு , பெங்களூரு இடையே காரில் பயணித்து கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் எதிரே வந்த வாகனத்தில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்தில் லேசான காயமடைந்த ரவி இந்த விபத்து குறித்து கூறும்போது,

 'சென்னை செல்வதற்காக எனது பாதுகாவலர் மற்றும் ஓட்டுனருடன் பெங்களூரு சென்று கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதில் நானும் காயமடைந்துள்ளேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களின் மன நிலைமையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு விஷயமாகும்' என கூறினார்.  

Next Story