காஷ்மீர் என்கவுன்டரில் காயமடைந்த வீரர் ஒரு வார சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


காஷ்மீர் என்கவுன்டரில் காயமடைந்த வீரர் ஒரு வார சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 11:18 AM GMT (Updated: 2019-02-20T16:48:25+05:30)

தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் காயமடைந்த ராணுவ வீரர் ஒரு வார சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் தெற்கே புல்வாமாவில் கடந்த 12ந்தேதி துணை ராணுவ படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.  இந்த மோதலில் ராணுவ வீரர் பல்ஜீத் சிங் பலியானார்.  ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஹிலால் அகமதுவும் கொல்லப்பட்டான்.

இதில் சந்தீப் குமார் என்ற வீரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்த நிலையில், ஒரு வார சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்து உள்ளார்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான நவீன் ஜாட் என்பவனை மருத்துவமனையில் இருந்து தப்புவிக்க தீவிரவாதி ஹிலால் அகமது உதவியுள்ளான்.  கடந்த வருடம் நவம்பரில் ஜாட் கொல்லப்பட்டான்.

Next Story