மேகாலயாவின் ஐக்கிய ஜனநாயக கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகல்


மேகாலயாவின் ஐக்கிய ஜனநாயக கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 20 Feb 2019 6:30 PM GMT (Updated: 2019-02-20T23:06:40+05:30)

மேகாலயாவின் ஐக்கிய ஜனநாயக கட்சி, பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.

ஷில்லாங்,

மேகாலயா மாநிலத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான ஐக்கிய ஜனநாயக கட்சி சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்தம் காரணமாக பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது. வடகிழக்கு மாநிலங்களில் அசாம் கணபரி‌ஷத் கட்சிக்கு அடுத்த பெரிய மாநில கட்சி இது.

கூட்டணியிலிருந்து வெளியேறியதாக அறிவித்த அக்கட்சியின் துணைத்தலைவர் அல்லன்ட்ரி காரிடம், மேகாலயா அரசுக்கு உங்கள் ஆதரவு தொடருமா? என்று கேட்டதற்கு, அதை தேசிய மக்கள் கட்சியின் முடிவுக்கு விட்டுவிட்டோம் என்றார்.


Next Story