வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது தேர்தல் கமி‌ஷன் திட்டவட்டம்


வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது தேர்தல் கமி‌ஷன் திட்டவட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2019 1:12 AM GMT (Updated: 2019-02-22T06:42:22+05:30)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது தேர்தல் கமி‌ஷன் தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது தொடர்பான சட்டம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது தொடர்பாக குழப்பம் நிலவியது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது. அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்று தங்களது வாக்குப்பதிவு மையங்களில் தான் வாக்களிக்க முடியும். அப்போது பாஸ்போர்ட்டை காட்டித்தான் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

Next Story