அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல்

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் ( வயது 62) . இன்று காலை சென்னைக்கு வந்த போது விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் பலியானார்.
இவர் மாவட்ட பஞ்சாயத்து சேர்மேனாக இருந்துள்ளார். சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர் ஆவார். மறைந்த அதிமுக எம்.பி எஸ்.ராஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ராஜேந்திரன் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் மூலம் அவர் என்றும் நினைவில் இருப்பார் என்று சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story