நாளை அமேதி தொகுதி செல்கிறார் பிரதமர் மோடி


நாளை அமேதி தொகுதி செல்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 2 March 2019 10:42 PM IST (Updated: 2 March 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தியின் தொகுதியான அமேதிக்கு நாளை பிரதமர் மோடி செல்ல உள்ளார். #PMModi #Amethi

அமேதி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான அமேதிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை செல்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு, அமேதி தொகுதிக்கு முதன்முறையாக செல்ல இருக்கிறார் பிரதமர் மோடி.

அமேதிக்கு நாளை செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி அமேதியில் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். மேலும் அமேதியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.

இந்நிகழ்ச்சி தவிர, பிரதமர் மின் உற்பத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் உற்பத்தி துறைகள் சார்ந்தும் பல வளர்ச்சித் திட்டங்களை அமேதி மற்றும் அமேதி வட்டாரப் பகுதிகளில் தொடங்கிவைக்கிறார். பின்னர் மோடி, கவ்ஹாரில் நாளை மாலை நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் வருகையையொட்டி தேவையான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Next Story