‘‘இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க கோருவதா?’’ - பா.ஜனதா கண்டனம்


‘‘இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க கோருவதா?’’ - பா.ஜனதா கண்டனம்
x
தினத்தந்தி 3 March 2019 12:00 AM IST (Updated: 2 March 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய விமானி அபிநந்தனை விடுவித்ததற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, பாகிஸ்தானில் எழுந்துள்ளது.

இதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் பேசியதாவது:–

இம்ரான் கான், நோபல் பரிசு பெற்றுக் கொள்ளட்டும். ஆனால், அது பாகிஸ்தானுக்கு உதவுமா? தங்கள் நாட்டில் பாகிஸ்தான் உருவாக்கிய அரக்கன், அந்த நாட்டையே பெருமளவில் விழுங்கி விட்டான். ஆனாலும் அவர்கள் மாறவில்லை. பயங்கரவாதத்தை தேசிய கொள்கையாக தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story