தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை வழக்கு: ராபர்ட் வதேராவை 19-ந் தேதி வரை கைது செய்ய தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Enforcement Department Case: Robert Vadra ban on arrest till 19th - The Delhi High Court order

அமலாக்கத்துறை வழக்கு: ராபர்ட் வதேராவை 19-ந் தேதி வரை கைது செய்ய தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கு: ராபர்ட் வதேராவை 19-ந் தேதி வரை கைது செய்ய தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் ராபர்ட் வதேராவை 19-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனரான ராபர்ட் வதேரா லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.

இந்த வழக்கு இன்று டெல்லி ஐகோர்ட்டில் சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


அப்போது இந்த வழக்கில் ராபர்ட் வதேராவை வருகிற 19-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.