காங்கிரசை விட பா.ஜ.க. அரசு சாலை வசதிகளை செய்துள்ளது; ப. சிதம்பரம்


காங்கிரசை விட பா.ஜ.க. அரசு சாலை வசதிகளை செய்துள்ளது; ப. சிதம்பரம்
x
தினத்தந்தி 3 March 2019 8:26 AM IST (Updated: 3 March 2019 8:26 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. அரசு சாலை வசதிகளை சிறப்புடன் செய்துள்ளது என முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, திறமை இல்லாத அரசு கூட சில விசயங்களை மேற்கொள்ளும்.  அது நாட்டிற்கு நலன் பயக்கும்.  அதனை நீங்கள் எப்படி மறுக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்பின் அவர் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தேசிய நெடுஞ்சாலை திட்டம் வெற்றி பெற்றுள்ளது.  நாங்கள் செய்த விசயங்களை விட நாளொன்றுக்கு அதிக அளவில் சாலை வசதிகளை அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.  அடுத்து வரும் அரசு இதனை விட சிறப்புடன் சாலை கட்டமைப்பினை மேற்கொள்ளும் என நான் நினைக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை மேம்படுத்த மாதம் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வருவோம் என்று கூறிய அவர், மத்திய அரசு 6 ஆயிரம்  ரூபாயும், மாநில அரசு 2 ஆயிரம் ரூபாயும் வாக்குக்காக நேரடியாக பணம் அளிக்கிறது.  இது ஓட்டுக்காக அளிக்கப்படும் லஞ்சம்.  அதனை பெற்று கொள்ளுங்கள்.  ஆனால் பிரதிபலன் செய்ய வேண்டும் என நினைக்காதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

Next Story