சீர்திருத்த கவிதை எழுதிய நபரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
குழந்தையை கொன்ற நபர் எழுதிய சீர்திருத்த கவிதைகளால் அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
குழந்தையை கொன்ற குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வருபவர் தியானேஷ்வர் சுரேஷ் போர்கர். இவர் தனது 22வது வயதில் இந்த கொலையை செய்துள்ளார்.
இதன்பின் சிறையில் இருந்தபடியே அவர் படிப்பினை முடித்துள்ளார். சீர்திருத்த கவிதைகளையும் எழுதியுள்ளார். நன்னடத்தையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், சிறையில் இருந்தபொழுது சுரேஷ், சமூகத்தில் இணைந்து வாழ முயற்சித்தது மற்றும் நாகரீக வளர்ச்சி அடைந்தது ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அவரது மரண தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு, கடந்த 18 வருட சிறை தண்டனையில் அவரது நடத்தையானது அவரை சீர்திருத்த முடியும் மற்றும் சீரமைக்க முடியும் என வெளிப்படுத்தி உள்ளது. இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
அவர் சிறையில் எழுதிய சீர்திருத்த கவிதைகள் தவறை அவர் உணர்ந்துள்ளார் என பிரதிபலிக்கிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story