உணவு திருடிய விமான ஊழியர்கள் - ஏர் இந்தியா நடவடிக்கை


உணவு திருடிய விமான ஊழியர்கள் - ஏர் இந்தியா நடவடிக்கை
x
தினத்தந்தி 5 March 2019 3:30 AM IST (Updated: 5 March 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

உணவு திருடிய விமான ஊழியர்கள் மீது ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

ஏர் இந்தியா விமானங்களுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் 2017-ம் ஆண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விமானத்தில் பயணிகளுக்கு வழங்கியது போக மிஞ்சிய உணவுகள் அடிக்கடி திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்தியதில் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் துணை மேலாளர் உள்ளிட்ட 2 பேர் அந்த உணவுகளை தங்கள் சொந்த உபயோகத்துக்கு எடுத்துக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் 63 நாட்கள் பணிநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோல் சர்வதேச விமானத்தில் மிஞ்சிய உணவுகளை 2 ஊழியர்கள் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த ஊழியர்களை அதிகாரிகள் எச்சரித்ததுடன், சர்வதேச விமானத்தில் பணி செய்வதில் இருந்து தரம் இறக்கப்பட்டு உள்நாட்டு விமானங்களில் பணி செய்ய உத்தரவிட்டனர்.


Next Story